பொலிஸாரும், வியாபாரிகளும் முட்டைகளை பதுக்கிவிட்டனர்..! நீண்ட வரிசையில் நின்ற அப்பாவிகள் எமக்கு ஒன்றுமில்லை, மக்கள் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
பொலிஸாரும், வியாபாரிகளும் முட்டைகளை பதுக்கிவிட்டனர்..! நீண்ட வரிசையில் நின்ற அப்பாவிகள் எமக்கு ஒன்றுமில்லை, மக்கள் குற்றச்சாட்டு..

பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட முட்டைகளில் பெரும்பகுதியை பொலிஸாரும், வர்த்தகர்களும் பங்குபோட்டுக் கொண்ட நிலையில் சாதாரண மக்கள் பலருக்கு முட்டை கிடைக்கவில்லை. என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். 

இந்த சம்பவம் கந்தளாய் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. இரு வர்த்தகர்கள் லொறி ஒன்றில் முட்டைகளை கொண்டுவந்த கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து விநியோகம் செய்திருந்தனர். இதன்போது பொதுமக்கள் சிலர் அதற்கு எதிர்ப்பு தொிவித்த நிலையில் வீதியில் வைத்து முட்டை விற்கப்பட்டது. 

சாதாரண மக்களுக்கு 10 தொடக்கம் 20 முட்டைகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. அதுவும் பல பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு முன்னர் வர்த்தகர்களுக்கு பெட்டிகளில் முட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

பொலிஸாரும் தமக்கு தெவையான முட்டைகளை எடுத்துவிட்டனர். இதனால் சாதாரண மக்கள் நீண்ட வரிசையில் நின்று முட்டை வாங்கியதுடன், பலர் முட்டை கிடைக்காமல் திரும்பி சென்றனர். என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு