நாங்கள் தமிழீழம் கேட்கவில்லை. த.தே.கூ.தலைவர் இரா.சம்மந்தன் கூறுகிறார்.

ஆசிரியர் - Editor I
நாங்கள் தமிழீழம் கேட்கவில்லை. த.தே.கூ.தலைவர் இரா.சம்மந்தன் கூறுகிறார்.
பிளவுபடாத நாட்டுக்குள், பிரிக்க முடியாத நாட்டுக்குள் உள்ளக சுயநிர்ணய உரிமை யின் அடிப்படையில் தமிழ் மக்கள் அங்கீக ரிக்கும் வகையிலாத தீர்வு வழங்கப்படவே ண்டும். அவ்வாறான தீர்வு வழங்கப்படாவி ட்டால் நாம் வெளியக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வை கோருவோம். என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமை ப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமா ன இரா.சம்மந்தன் தமிழ் மக்களை நாம் ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம், தமிழ் அங் கீகரிக்காத தீர்வினை தமிழ்தேசிய கூட்ட மைப்பு அங்கீகரிக்காது எனவும் கூறியுள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போ ட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஆதரித்து யாழ்.சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இன்று மாலை நடைபெற்ற பி ரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே சம்மந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டில் ஒற் றையாட்சி தொடருமா? தமிழீழம் மலருமா? என பார்ப்போம் என கூறுகிறார். நாங்கள் தமிழீழம் கேட்கவி ல்லை. 1987ம் ஆண்டு 13ம் திருத்தச்சட்டம் வந்த பின்னர் அதனை நாங்கள் ஏற்காதபோதும், 13ம் திருத்தச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற மாகாணசபை தேர்தலில் நாம் போட்டியிடாதபோதும் அதனை தீர்வுக்கான

முதல் படியாக நினைத்தோம். அதன் பின்னர் நாங்கள் தமிழீழம் கேட்கவில்லை. எமது இறையாண்மை யின் அடிப்படையில் மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்பின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு பிரிக்கப்படாத நாட்டுக்குள் கௌரவமான பிரஜைகளாக நாம் வாழக்கூடிய தீர்வை யே நாங்கள் கேட்கிறோம். ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் 2015ம் ஆண்டு நிறைவேற்றப்

பட்டிருக்கும் தீர்மானத்தில் போரில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக உண்மை அறியப்படவேண்டும். அதனடிப்படையில் நீதி வழங்கப்படவேண்டும், நீதியின் அடிப்படையில் பொறுப்புகூறல் இடம்பெறவேண் டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்கப்படவேண்டும், மீள நிகழாமை உறுதி செய்யப்படவேண் டும், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதனை தாம் செய்வ

தாக இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளது. அதனை விடவும் இன்றைக்குள்ள சர்வதேச சட்டத்தின் பிரகாரம் விசேடமாக ஐ.நா மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையில் மக்கள் மீது ஆட்சி செய்பவ ர்கள் ஜனநாயக தேர்தல் ஊடாக மக்களின் சம்மதத்தை பெறவேண்டும் என கூறப்பட்டுள்ளது. 1956ம் ஆண்டு தொடக்கம் மக்கள் அந்த ஆணையை எப்படி வழங்கினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியு

ம். 1956ம் ஆண்டு தொடக்கம் இன்றளவும் நடக்கின்ற ஆட்சி எங்கள் மீது திணிக்கப்பட்ட ஆட்சி. இந்த நிலை தொடர முடியாது. இது மாற்றப்படவேண்டும். எமக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை கோரும் உரி மை உண்டு. அந்த உள்ளக சுயநிர்ணய உரிமை தொடர்ந்தும் மீறப்பட்டால் நாங்கள் வெளிப்பட்ட சுயநிர் ணய உரிமையை கோருவோம். அதற்கு சர்வதேச சட்டங்களில் இடமுண்டு. எமக்கு உரிமையும் உண்டு.

தமிழ் மக்கள் இந்த தேர்தலில் என்ன தீர்ப்பை வழங்கப்போகிறார்கள்? என சர்வதேசம் பார்த்துக் கொ ண்டிருக்கிறது. இன்றும் கூட ஒரு இராஜதந்திரி என்னை தொடர்பு கொண்டு கேட்டார் 2015ல் மக்கள் உங்களுக்கு கொடுத்த ஆணையை இப்போதும் தருவார்களா? என மக்கள் ஆணை கொடுக்கவில்லை. தங்களுடைய விசுவாசமான பிரதிநிதிகளாக எங்களை கருதினார்கள். அந்த நிலை பலமடையவேண்டு

ம். பலவீனப்படுத்தப்பட முடியாது. நாம் பக்குவமாகவும், நிதானமாகவும் நடந்திருக்கிறோம். இடைக்கால அறிக்கையில் ஒன்றும் இல்லை என கூறுகிறார்கள். இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி என்ற சொல் தமிழிழல் இல்லை. யுனிட்டரி ஸ்டேன் என்பது ஆங்கிலத்தில் இல்லை. ஏக்கிய இராச்சிய என்ற சொல் சிங்களத்தில் உள்ளது. அதனை சிங்கள மக்கள ; விரும்புகிறார்கள். சிங்கள மக்கள் நினைக்கிறா

ர்கள் அந்த சொல் இருந்தாலே நாடு பிரிக்கப்படாது என. அது தொடர்பாக சிங்கள மக்கள் எங்களிடம் கேட்டபோது நாம் கூறினோம் நாடு பிரிக்க நாங்கள் கேட்கவில்லையென. ஏக்கிய இராச்சிய என்பதன் பொருள் பிரிக்க முடியாத, பிரிபடாத ஒருமித்த நாடு. ஏக்கிய இராச்சிய என்பது ஆட்சிமுறையை குறிக்கும் சொல் இல்லை. அது பிரதேசத்தை குறிக்கிறது. நீதிமன்றில் விவாதத்திற்கு வந்தால்கூட அரசியலமைப் பில் கூறப்பட்ட சொல்லை மீறி எதனையும் யாரும் கூற இயலாது. பகிரப்பட்ட அதிகாரங்கள் மீள பெறமு டியாது. பகிரப்பட்ட அதிகாரங்களில் அரசு தலையிட முடியாது. அதிகாரங்கள் பகிரப்பட்ட ஒழுங்கில் மாற்

றம் செய்ய முடியாது. அதிகாரம் மத்தியிலும், மாநில த்திலும் இருக்கும் இவ்வாறு சமஷ்டிக்குரிய உள்ள டங்கள் உள்ளது. வடகிழக்கு இணைப்பு தொடர்பில் வடகிழக்கு ஒரு மாகாணமாக கருதப்படலாம், இரு மாகாணங்களாக கருதப்படலாம், வடகிழக்கு இணைக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். என விடயங்கள் உள்ளது. இது விடயம் சம்மந்தமாக முடிவுகள் இல்லை. முஸ்லிம தலைவர்களுடன்

பேசி இந்த விடயம் தொடர்பாக முடீவுக்கு வரவேண்டும். அவர்களை உதாசீனம் செய்து இந்த விடயத் தை நிறைவேற்ற முடியாது. இடைக்கால அறிக்கையில் முன்னேற்ற கரமான விடயங்கள் இருக்கிறது. சில விடயங்கள் சம்மந்தமாக முன்னேற்றங்கள் தேவை. இதனை உதாசீனம் செய்ய முடியாது. எங்களை வெளியேறுங்கள் என சில தலைவர்கள் சொன்னார்கள். நாங்கள் வெளியேற முடியாது. நா

ங்கள் மக்களால் தேர்வு செய்யப் பட்டவர்கள் மக்களுக்கு தேவையானதை செய்யவேண்டும். மக்கள் ஏற்காத ஒரு தீர்வை நாங்கள் ஏற்கப்போவதில்லை. மக்கள் எதிர்பார்க்கும் நியாயமான தீர்வு கனா, அவுஸ்ரே, இந்தி, ஜேர்மனி ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வாக இருந்தால் நாங்கள் அதனை உதா சீனம் செய்ய முடியாது. கோஸங்களின் அடிப்படையில் முடிவெடுக்க முடியாது. உள்ளடக்கத்தின் அடிப் படை

யில் முடிவெடுக்க முடியாது. மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம். சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் நாங்கள் பல சந்தர்ப்பங்களை இழந்துள்ளோம். அதேபோல் இப்போதும் இழக்க முடியாது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ்தேசிய மக்கள் முன்னணி என வருகிறார்கள். இவர்கள் யார்? பண்டா- செல்வா ஒப்பந்தம் செய்யப்பட்டபோது அதனை எதிர்த்தார்கள், டட்லி- செல்வா ஒப்பந்தம் செய்

யப்பட்டபோது அதனையும் எதிர்த்தார்கள். தந்தை செல்வா சமஷ்டி கோரிக்கையை முன்வைத்தபோது அதனையும் எதிர்த்தார்கள். இப்போது எமக்கு சமஷ்டி தெரியாது. தங்களுக்கே சமஷ்டி தெரியும் எனக் கூறுகிறார்கள். அந்த சைக்கிளிலில் தான் இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறார்களா? ஏன் சமஷ்டியை எதிர்த்தீர்கள்? இன்று சமஷ்டி எங்களுக்கே தெரியும் என்கிறீர்கள். இதேபோல் மற்றொரு தரப்பு மஹிந்த ராஜபக்ஷவுடன் 2004-2015 வரை ஒட்டிக் கொண்டிருந்தவர்கள், மஹிந்த ராஜபக்ஷ செய்த துரே

hகங்களை அங்கீகரித்தவர்கள், மஹிந்த 13ம் திருத்தச்சட்டத்தை நீக்க முயற்சித்தபோது மௌனமாக இருந்தவர்கள், 18ம் அரசியலமைப்பு சீர்திருத்த்தை கொண்டுவந்தபோது ஆதரித்து 3ல், 2 ஆதரவை கொடுத்தவர்கள். இவர்களும் இன்று யாழ்ப்பாணத்தில், திருகோணமாலையில் போட்டியிடுகிறார்கள். தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிராக மஹிந்த செயற்பட்டபோது ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் உத

வியர்கள் இப்போது வாக்கு கேட்கிறார்கள். இவர்களிடம் தமிழ் மக்கள் தனிப்பட்ட முறையில் உத விகளை பெற்றிருக்கலாம். அதற்காக தமிழ் மக்களுக்கு துரோகம் செய்த கட் சியை ஆதரிக்க கூடாது. தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்சி 56ம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளது. 30 வருடம் ஆயுதப்போராட்டம் பல துன்பங்களை சந்தித்தோம். பல ஆயிரக்க

ணக்கான இளைஞர்கள் உயிரிழந்தார்கள். அந்த நிலை மாற்றப்படவேண்டும். இப்போது இந்த சந்தர் ப்பம் கிடைத்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்தவேண்டும். அமைச்சர், பதவி சலுகைகளுக்காக உங்களை கைவிடமாட்டோம். இவற்றை புரிந்து எங்கள் நிலைப்பாடு எங்கள் பங்களிப்பு அவர் களுடைய நிலைப்பாடு சரித்திரம் இவற்றை அறிந்து ஒற்றுமையாக ஒருமித்து தமிழ்தேசிய கூட்டமைப்பு

க்கு முழுமையான ஆதரவினை தந்து திடமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு