இந்திய வம்சாவளி பெண்ணை மனந்த மேக்ஸ்வெல்!!

ஆசிரியர் - Editor II
இந்திய வம்சாவளி பெண்ணை மனந்த மேக்ஸ்வெல்!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெலுக்கும் இந்திய வம்சாவளி பெண்ணுக்கும்  மெல்போர்னில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஸ்திரேலிய பெண்ணான வினிராமன் என்பவரை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று தகவல் வெளியாகி இருந்தது.

கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. இவர்கள் ஜோடியாக பல இடங்களுக்கு சென்ற புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேக்ஸ்வெல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட போது அதில் இருந்து மீள உதவியதில் வினிராமனுக்கு முக்கிய பங்குள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் மேக்ஸ்வெலுக்கும், வினிராமனுக்கும் இந்திய பாரம்பரிய முறைப்படி மெல்போர்னில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்திய பாரம்பரிய உடையில் இருக்கும் இருவரின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமண தேதி எப்போது என்று வெளிப்படுத்தவில்லை.

மேக்ஸ்வெல் திருமணம் செய்துகொள்ள இருக்கும் 27 வயதான வினிராமனின் பெற்றோர் தென் இந்தியாவை சேர்ந்தவர்கள். ஆனால் வினிராமன் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் ஆஸ்திரேலியாவில் தான். அவர் மெல்போர்னில் மருந்தகப்பிரிவில் படிப்பை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Radio