கொரோனா முன்னெச்சரிக்கை சென்னை மக்களிடம் இல்லை!! -அஸ்வின் கவலை-

ஆசிரியர் - Editor III
கொரோனா முன்னெச்சரிக்கை சென்னை மக்களிடம் இல்லை!! -அஸ்வின் கவலை-

உலகையே அச்சுறுத்தும் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையை சென்னை மக்கள் கடைபிடிக்க தவறுவதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் கவலை வெளியிட்டார். 

உயிர் கொல்லி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 6,500 பேர் வரை பலியாகி உள்ளனர். 1.69 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் அனைத்து வகையான விளையாட்டுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் உள்ளன.

பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 15-ந்தேதிவரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து குறைந்த அளவிலான ஆட்டங்கள் நடைபெறுமா? என்பது பின்னர் தெரியவரும்.

இந்தியாவில் கொரோனாவுக்கு 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இந்த நிலையில் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையை சென்னை மக்கள் கடைபிடிக்க தவறுவதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் வேதனை தெரிவித்துள்ளார். சென்னையை சேர்ந்த டெஸ்ட் வீரரான அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கூறி இருப்பதாவது:-

கொரோனா முன் எச்சரிக்கையை சென்னை மக்கள் தவிர்க்கிறார்கள். மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு கூறப்பட்டதை சென்னை மக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

சென்னையில் நிலவும் கடுமையான வெப்ப நிலையால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் என்று மக்கள் நினைத்து இருக்கலாம். அல்லது தங்களை எதுவும் தாக்காது என நம்பிக்கை கொண்டு இருக்கலாம் என்று கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு