SuperTopAds

ஐ.பி.எல் தள்ளிவைக்கப்படுமா? கிரிக்கெட் வாரியம் விரைவில் முடிவு!!

ஆசிரியர் - Editor III
ஐ.பி.எல் தள்ளிவைக்கப்படுமா? கிரிக்கெட் வாரியம் விரைவில் முடிவு!!

உலகின் பல நாடுகளில் மட்டுமல்லாது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது தள்ளி வைப்பதா? என்பது குறித்து ஒருரிரு நாட்களில் பி.சி.சி.ஐ. தனது முடிவை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, வருகிற 29 ஆம் திகதி முதல் மே 24 ஆம் திகதி வரை 9 நகரங்களில் நடக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

இருப்பினும் கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல். போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஐ.பி.எல். போட்டிகளில் வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் வருவதால் இந்தப் போட்டிக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது.

ஐ.பி.எல். ஆட்டத்தை காண ரசிகர்கள் மைதானத்தில் பெரும் அளவில் திரள்வார்கள். இதனால் கொரோனா பரவுவதை தடுக்க ஐ.பி.எல். போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று மராட்டிய சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே ஏற்கனவே வலியுறுத்தி இருந்தார்.

ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் படேல் இது குறித்து பதில் அளிக்க மறுத்துவிட்டார். பி.சி.சி.ஐ. இது குறித்து விரைவில் முடிவு செய்ய மத்திய அரசின் முடிவை பொறுத்துதான் கிரிக்கெட் வாரியம் இதில் தனது நிலையை தெரிவிக்கும்.

ஐ.பி.எல். போட்டியை டெலிவி‌ஷனில், மொபைலில் பார்ப்பவர்களின் எண் ணிக்கை மிகவும் அதிகம். இதனால் ரசிகர்களே இல்லாமல் போட்டியை நடத்தலாமா? என்ற ஆலோ சனையும் நடத்தப்படுகிறது. ரசிகர்கள் இல்லாமல் போட் டியை நடத்துவது உகந்தது இல்லை என்று சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பணம் கொழிக்கும் இந்தப் போட்டியை தள்ளி வைப்பதால் பி.சி.சி.ஐ.க்கு அதிகளவில் வருவாய் இழப்பு ஏற்படும்.

இதனால் கூடுமானவரை திட்டமிட்ட தேதியில் நடத்த விரும்பும். ஆனால் மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒத்துழைக்க மறுத்தால் போட்டியை தள்ளிவைக்க வேண்டிய நிலையே ஏற்படும். எப்படி இருந்தாலும் இது குறித்து ஒருரிரு நாட்களில் பி.சி.சி.ஐ. தனது முடிவை தெரிவிக்கும்.