கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

12 வயது சிறுவனை கடத்திய ஆட்கடத்தல் கும்பல்..! சிறுவன் மீட்பு. பங்களாதேஷ் நாட்டை சேரந்த 4 பேர் உட்பட 6 கடத்தல்காரர்கள் கைது..

ஆசிரியர் - Editor
12 வயது சிறுவனை கடத்திய ஆட்கடத்தல் கும்பல்..! சிறுவன் மீட்பு. பங்களாதேஷ் நாட்டை சேரந்த 4 பேர் உட்பட 6 கடத்தல்காரர்கள் கைது..

12 வயது சிறுவன் ஒருவனை கடத்த முயற்சித்த பங் களாதேஷ் நாட்டவர் 4 பேர் உட்பட 6 பேர் கண்டி கடுக் கஸ்தோட்ட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுவன் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தனது நண்பர்களுடன் மேலதிக வகுப்பொன்றுக்கு சென்று திரும்பி கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த சந்தேகநபர்கள் வான்ரக வாகனத்தில் வந்து அந்த சிறுவனை சிறிது தூரம் இழுத்து சென்று வாகனத்தில் ஏற்றிச் செல்ல முயற்சித்துள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு பிரவேசித்த சிறுவனின் தந்தை மகனை மீட்டுள்ளார். பின்னர் சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தை பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய கட்டுகஸ்தோட்ட காவல்துறையினர் முன்னெடுத்து விசாரணைகளுக்கு அமைய குறித்த 6 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் நான்கு பேர் பங்களாதேஸ் பிரஜைகளுடன் ஏனைய இருவரும் கடவத்தை மற்றும் கலகெதர பகுதிகளை சேர்ந்தவர்கள்.

Radio
×