மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனைகளில் மோசடி ரணிலும் கைதாகிறார்?

ஆசிரியர் - Admin
மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனைகளில் மோசடி ரணிலும் கைதாகிறார்?

மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனைகளில் இடம்பெற்ற மோசடி விவகாரத்தில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2015ம் ஆண்டு பிணைமுறி மோசடி இடம்பெற்றபோது கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டுள்ளார். 

அவரே 10 பில்லியன் பெறுமதியான பிணைமுறிகளை விற்பனை செய்ய ஆலோசனை வழங்கியிருந்ததாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வழக்கில் சந்தேக நபரான பெயரிடப்படுவார் என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் பேச்சாளர் நிஷாரா ஜயரத்ன, ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.

இதேவேளை, மத்திய வங்கியின் பிணை முறி மோசடிக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க நேற்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு