வடக்கில் வேட்பாளர்களைக் பிடிக்க ஓடித் திரியும் சொகுசு வாகனங்கள்!

ஆசிரியர் - Admin
வடக்கில் வேட்பாளர்களைக் பிடிக்க ஓடித் திரியும் சொகுசு வாகனங்கள்!

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கில் வேட்பாளர்களை தேடிப்பிடிக்கும் முயற்சியில் கொழும்பை மையப்படுத்திய பிரதான கட்சிகள் ஈடுபட்டுள்ளன. வேட்பாளர்களை பிடிப்பதற்காக மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட சொகுசு வாகனங்கள் பலவும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஓடித் திரிகின்றன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள், போன்ற பல கட்சிகள் வேடக்கில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளன.

இந்தக் கட்சிகளுக்கு வடக்கில் நிர்வாக கட்டமைப்புகள் இல்லாத நிலையில், வேட்பாளர்களை தெரிவு செய்வது கடினமாக உள்ளது. இந்த நிலையில் சொகுசு வாகனங்களில் திரியும் கட்சிகளின் முக்கியஸ்தவர்கள், வேட்பாளர்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Ads
Radio
×