வடக்கில் கடன்சுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுண்கடன்!

ஆசிரியர் - Admin
வடக்கில் கடன்சுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுண்கடன்!

வடக்கு, வட மத்திய மாகாணங்களில் கடன் சுமையினால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு நுண் நிதி கடன் வசதிகளை வழங்கும் வேலைத் திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் வாழும் கடன் சுமையினால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு நுண் நிதி கடன் வசதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துதல்.

பல்வேறு நுண் நிதி நிறுவனங்களில் கடனைப் பெற்றுக் கொண்டுள்ள கிராமத்தில் குறைந்த வருமானங்களைக் கொண்ட பயனாளிகளை இந்த கடன் சுமையில் இருந்து மீட்டெடுப்பதற்காக கூட்டுறவு கிராமிய வங்கி மற்றும் சிக்கன மற்றும் கடன் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக கடன் ஆலோசனை முறை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கடன் ஆலோசனை முறையை நடைமுறைப்படுத்துவதற்காக தற்பொழுது 542 மில்லியன் ரூபா திரைச்சேரியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தற்பொழுது இந்த கடன் ஆலோசனை முறையை நடைமுறைப்படுத்தும் நிதி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்தும் இதன் செயற்பாட்டு நிதியத்தின் மூலம் சம்பந்தப்பட்ட கடன் வேலைத் திட்டத்தை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்கும், இதன் கீழ் தற்பொழுது வழங்கப்படும் ஆகக் கூடிய கடன் வரையறையை ஒரு நபருக்காக 60,000 ரூபா வரையில் அதிகரிப்பதற்கு நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு