பாடசாலையில் மடிகணனியை திருடிய 4 மாணவா்கள் கைது..! 10 தொடக்கம் 14 வயதிற்குட்பட்டவா்களாம்..

ஆசிரியர் - Editor
பாடசாலையில் மடிகணனியை திருடிய 4 மாணவா்கள் கைது..! 10 தொடக்கம் 14 வயதிற்குட்பட்டவா்களாம்..

பாடசாலைக்குள்ளிருந்து மடி கணனியை திருடி சென்ற 10 முதல் 14 வயதுக்குட்பட்ட 4 மாணவா்க ளை பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

லிந்துலை – திஸ்பனை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வாரம் இடம்பெற்ற திருட்டுச்சம்பவம் தொடா்பிலேயே இவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பாடசாலையில் மடிக்கணினி ஒன்று திருடப்பட்டமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களை 

நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Ads
Radio
×