விபத்துக்குள்ளான வாகனங்களை தீ வைத்து கொழுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது..! எரிந்த நிலையில் இரு சடலங்கள் மீட்பு, ஆவணங்கள் எரிந்து நாசம்..

ஆசிரியர் - Editor I
விபத்துக்குள்ளான வாகனங்களை தீ வைத்து கொழுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது..! எரிந்த நிலையில் இரு சடலங்கள் மீட்பு, ஆவணங்கள் எரிந்து நாசம்..

வவுனியா- பன்றிக்கெய்த குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தையடுத்து விபத்துக்குள்ளான வாகனங்களை தீ வைத்து கொழுத்தியவர்கள் என சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய் யப்பட்டுள்ளனர்.

இ.போ.ச பேருந்தும் ஜீப் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தீயில் கருகிய நிலையில் இருவரது உடல்கள் மீட்கப்பட்டன. இதில் வான் சாரதியுமாவார். 

காரைநகரை சேந்த Renushan வயது22  சாரதியே உயிரிழந்துள்ளார். காயமடைந்த நிலையில் காணப்பட்ட சாரதி மீட்க முடியாத நிலையில் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்

விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பெண் ஒருவரும் அடங்கியுள்ளார். பஸ்ஸை கொழுத்தியதால் பயணித்தவர்களின் உடைமைகளும் எரிந்து சாம்பலாகியுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு