SuperTopAds

இலங்கை மகளீர் அணிக்கு முதல் போட்டியில் தோல்வி!!

ஆசிரியர் - Editor III
இலங்கை மகளீர் அணிக்கு முதல் போட்டியில் தோல்வி!!

அவுஸ்ரேலியாவில் இடம்பெற்றுவரும் மகளிர் உலகக் கிண்ண ‘ரி-20’ தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில் இலங்கை மகளிர் அணி, நியூசிலாந்து மகளிர் அணியிடம் தோல்வியடைந்துள்ளது.

10 நாடுகள் பங்குபெறும் மகளிர் உலகக் கிண்ண ரி-20 தொடர், அவுஸ்ரேலியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது.

பேர்த் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை மகளிர் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதின.

இதில், நாணச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக அணித்தலைவி சாமரி அத்தப்பத்து 41 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து 128 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய நியூசிலாந்து மகளிர் அணியினர், அணித்தலைவி ஷோபியா டெவினின் அரைச்சதத்தின் உதவியுடுன் 17.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

இதே மைதானத்தில் நேற்று இடம்பெற்ற மற்றுமொரு லீக் போட்டியில் தாய்லாந்து மகளிர் அணியை, 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி தோற்கடித்துள்ளது.