இது வெறும் தொடக்கம் மட்டுமே..! கோட்டா அரசுக்கு அடுத்தடுத்து இருக்கிறது.. தமிழ்தேசிய கூட்டமைப்பு பகிரங்க எச்சாிக்கை..

ஆசிரியர் - Editor I
இது வெறும் தொடக்கம் மட்டுமே..! கோட்டா அரசுக்கு அடுத்தடுத்து இருக்கிறது.. தமிழ்தேசிய கூட்டமைப்பு பகிரங்க எச்சாிக்கை..

ஐ.நா மனித உாிமைகள் பேரவையின் தீா்மானங்களுக்கு வழங்கிய இணை அனுசரணையிலிருந்து நீ ங்கியமை மற்றும் தீா்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தமையின் விளைவே இலங்கையின் இராணுவ தளபதி மீதான அமொிக்காவின் உள்நுழைவு தடையாகும். 

அமெரிக்காவை பின்பற்றி ஏனைய நாடுகளும் தடைகளை விதிக்குமென எதிர்பார்க்கிறோம். மேலும் இது ஒருவருக்கல்ல, இன்னும் பலரிற்கு தடைகள் வரலாமெனவும் எதிர்பார்க்கிறோம். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளா் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளாா். 

தமிழரசு கட்சியின் தலமை அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற திடீா் ஊடக சந்திப்பின்போ தே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், ஐ.நா மனித உாிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இலங்கை விலகுவதால் வலுவிழக்காது. 

இந்த தீர்மானங்கள் இலங்கையும் இணை அனுசரணை வழங்கியதால் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஏற்கனவே இலங்கை எதிர்ப்பு தெரிவித்தபோதும், மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கை எதிர்த்ததால் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. 

இலங்கை எதிர்த்தது என்பதால், அவை வலுவிழக்கவில்லை.2014ம் ஆண்டு வாக்கெடுப்பினால் நடத்தப்பட்ட தீர்மானத்தில், சர்வதேச விசாரணை நடத்தும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கை எதிர்ப்பு தெரிவித்தபோதும், சர்வதேச விசாரணை நடந்து முடிந்து, 

அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. நாம் ஒத்துழைக்க மாட்டோம் என இலங்கை விலகலாம். மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எதுவும் அரசுகளை கட்டுப்படுத்தாது.அதனால் விலகுகிறோம் என சொல்லத் தேவையில்லை. 

அதற்கு அர்த்தம் கிடையாது. நாம் ஒத்துழைக்க மாட்டோம் என குறிப்பிடலாம். எனினும், எதிர்வரும் தேர்தலில் தம்மை தேசிய வீரராக காட்ட இப்படி அறிவித்துள்ளனர்.அரசாங்கம் இப்படி நடக்கலாமென எதிர்பார்த்து சில நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். அரசு அந்த அறிவித்தல் விடுத்தால் 

என்ன செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஒத்துழைக்க மாட்டோம் என இலங்கை சொன்னால், தீர்மானத்தின் உண்மையான நிலைப்பாட்டை- சிங்கள மக்களும் புரியும் விதமாக வெளிப்படுத்த வேண்டுமென கேட்டுள்ளோம்.இலங்கை தீர்மானத்தை முன்னெடுக்கும் 5 நாடுகளும் சேர்ந்து 

எழுத்து மூலமாக கூட்டறிக்கையை வெளியிடுவதாக சொல்லியுள்ளனர்.சம்பந்தப்பட்ட நாடு பொறுப்பெடுத்த விடயங்களை செய்யாவிட்டால் அடுத்தது என்னவென்ற கேள்வியுள்ளது.புதிய அரசு பிரேரணையுடன் ஒத்துழைக்க மாட்டோம் என கூறியதால், மாற்று வழிகள் பற்றியும் பேசியுள்ளோம். 

முன்னாள் ஆணையாளர் இளவரசர் செய்ட் சில மாற்று வழிகளை பரிந்துரைத்துள்ளார். அதிலொன்றாக, உலகளாவிய நியாயாதிக்கத்தை உறுப்பு நாடுகள் பிரயோகிக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார். அதைத்தான் அமெரிக்கா தற்போது சவேந்திர சில்வாவின் 

பயணத்தடை மூலம் செய்துள்ளது. அதை பின்பற்றி ஏனைய நாடுகளும் பலருக்கு தடை விதிக்குமென நம்புகிறோம் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு