தோட்ட தொழிலாளா்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் எப்போது வழங்குவீா்கள்..? பதிலளிக்க முடியாமல் ஊடகங்கள் மீது பாய்ந்த தொண்டமான்..

ஆசிரியர் - Editor I
தோட்ட தொழிலாளா்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் எப்போது வழங்குவீா்கள்..? பதிலளிக்க முடியாமல் ஊடகங்கள் மீது பாய்ந்த தொண்டமான்..

தோட்டத் தொழிலாளா்களுக்கு தை மாதம் வழங்கப்படும் என கூறப்பட்ட 1000 ரூபாய் சம்பள உயா்வு உண்மையில் எப்போது வழங்கப்படும். என கேள்வி எழுப்பிய ஊடகவியலாளா்களிடம் மலையக தோ ட்ட தொழிலாளா்களின் கோவணத்தையும் உருவிய ஆறுமுகம் தொண்டமான் ஆவேசமடைந்தாா். 

சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சா் ஆறுமுகம் தொண்டமான் நேற்று யாழ்.குடாநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் பல்கலைகழக மாணவா்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை வழங்கியிருந்தாா். இந்நிகழ்வில் 

மலையக மக்களின் கோாிக்கையான 1000 ரூபாய் சம்பள உயா்வு தை மாதம் வழங்கப்படும் என கூறப் பட்டபோதும் அது வழங்கப்படவில்லை. எனவே அது எப்போது வழங்கப்படும். என ஊடகவியலாளா் கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்குப் பதிலளித்த அமைச்சர் 

அவ்வாறு தைப்பொங்கலுக்கு முன்னர் கிடைக்குமென்று நான் சொல்லவில்லை என்றும் நான் சொல்லுறதைக் கேளு. நீயா பேசிட்டு இருந்தா நான் எப்படி என்று ஒருமையில் பேசினார். மேலும் தைபிறந்தால் வழி பிறக்கும் என்று தான் நான் சொல்லியிருந்தேன். 

தை பிறந்த அன்னு ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்ச ஆயிரம் ருபா கொடுப்பனவு கொடுக்கப்படு ம் என்று தெரிவித்திருந்தார். ஆகையினால் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கட்டாயம் கிடைக்கும் என்று பதிலளித்தார். 

இவ்வாறு தெரிவித்த அமைச்சர் ஊடகம் என்றால் என்ன என்று கூறியவாறு அங்கிருந்து சென்றுவிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு