பகிரங்கமாக கூறிய ஒரு கருத்தை நிரூபிக்க வக்கற்ற சுமந்திரன்..! வி.மணிவண்ணன் ஆவேசம்..

ஆசிரியர் - Editor
பகிரங்கமாக கூறிய ஒரு கருத்தை நிரூபிக்க வக்கற்ற சுமந்திரன்..! வி.மணிவண்ணன் ஆவேசம்..

பகிரங்கமாக கூறிய கருத்தை நிரூபிக்க வக்கற்ற நாடாளுமன்ற  உறுப்பினா் சுமந்திரன் தமிழ்தேசிய அரசியலில் இருந்து ஓதுக்கப்படவேண்டியவா். என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளா், சட்டத்தரணி வி.மணிவண்ணன் கூறியுள்ளாா். 

இது தொடா்பாக மேலும் அவா் கூறுகையில், கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சட்டத்தரணி சுமந்திரன் நான் அமைச்சர் ரவி கருணாநாயக்காவை காக்கா பிடித்து வரியின்றிய 

கார் ஒன்றை வாங்கியதாக பொய் பரப்புரை ஒன்றை செய்திருந்தார்.குறித்த பொய் பரப்புரைக்கு தேர்தல் கூட்டமொன்றில் பதிலளித்த நான் எனது காரிற்கு தீர்வை செலுத்திய பற்றுச்சீட்டை காண்பித்ததுடன் சுமந்திரன் நான் தீர்வை இன்றிய 

வாகனத்தை காக்கா பிடித்து வாங்கியதை ஒரு மாத காலத்திற்குள் நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் என்றும் அதை நிரூபிக்க தவறினால் சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் பகீரங்க சவால் விடுத்திருந்தேன்.

எனினும் இரண்டு ஆண்டுகள் கடந்தும் குறித்த குற்றச்சாட்டினை சுமந்திரன் நிரூபிக்கவுமில்லை பதவி விலகவும் இல்லை. குறித்த பொய் குற்றச்சாட்டையும் மீறி மாறாக மக்கள் எனக்கு வாக்களித்து என்னை மாநகர சபை உறுப்பினராக்கினர்.

ஆனால் எனது சவாலில் தோற்ற சுமந்திரன் தனது பதவியை விலகாது மக்கள் விருப்பிற்கு மாறாக எனது உறுப்புரிமையை இரத்து செய்ய வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இவ்வாறான போலியான நபர்களை இனம் கண்டு மக்கள் எதிர்வரும் தேர்தலில் 

தக்க பாடம் புகட்ட வேண்டும். சுமந்திரன்ற போன்றோர் தமிழ் தேசிய அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.எனக்கு எதிராக 2 வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். எத்தனை வழக்குகளை  எனக்கெதிராக தாக்கல் செய்தாலும் 

எனது அரசியல் பயணம் வீச்சோடும் மூச்சோடும் தொடரும் என்றார்.

Ads
Radio
×