சிறீலங்கா அரசின் சுதந்திர தினத்தை புறக்கணிப்போம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் காட்டம்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நாளை இடம்பெறும் சுதந்திரதினத்தை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று 349 நாட்களாக காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி போராடி வரும் உறவுகள் இதனை தெரிவித்துள்ளனர்.
நாளையதினம் ஸ்ரீலங்காவின் 70 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையில் தமது உறவுகளை தேடி நாளையுடன் 350 நாட்களை எட்டியுள்ள நிலையில் நாளை இடம்பெறும் நாட்டின் சுதந்திர தினத்தை எப்படி தாம் கொண்டாடுவது என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.
பனிஇமழைஇவெயில் பாராது தகர கொட்டகைக்குள் பல துன்பங்களின் மத்தியில் போராட்டத்தை தாம் முன்னெடுத்து வருகின்ற போதிலும் நாட்டின் ஜனாதிபதியோ அல்லது அரசியல் தலைவர்களோ இதுவரை தமக்கு எந்த விதமான பதிலையும் வழங்கவில்லை.
அப்படி இருக்கையில் எவ்வாறு இது தமக்கான சுதந்திர தினமாக இருக்கும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.