SuperTopAds

தமிழீழ விடுதலை புலிகளின் கொள்கைகளை நிறைவேற்ற கோட்டா அரசில் இடமில்லை..! சம்மந்தன், சுமந்திரனுக்கு எச்சாிக்கை..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் கொள்கைகளை நிறைவேற்ற கோட்டா அரசில் இடமில்லை..! சம்மந்தன், சுமந்திரனுக்கு எச்சாிக்கை..

தமிழீழ விடுதலை புலிகளின் கொள்ளைகளை காவிக் கொண்டு அவற்றை நிறைவேற்றுவதற்கா க சம்மந்தன், சுமந்திரன் போன்றவா்கள் அரசாங்கம் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என அமைச்சா் லக்ஸ்மன் யாப்பா அபேவா்த்தன கூறியுள்ளாா். 

அரசியல் தீர்வு வழங்குவதாக வாக்குறுதி வழங்கி ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில் லை என தகவல் மற்றும் தொடர்பாடல் இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தொிவித்துள்ளார் .அரசியல் தீர்வு குறித்து கூட்டமைப்பினர் அரசாங்கத்திற்கு 

ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. அரசியல் தீர்வை வழங்குவதாக குறிப்பிட்டு ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இனங்களுக்கிடையில் முரண்பாடற்ற தீர்மானங்களை மாத்திரமே முன்னெடுப்போம் என்றார்.

ஊடக அமைச்சில் இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர்க ளான சம்பந்தனும், சுமந்திரனும் விடுதலை புலிகள் அமைப்பின் 

நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றார்கள். அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்திற்கு இவர்களால் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. அரசியல் தீர்வு வழங்குவதாக வாக்குறுதி வழங்கி ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. 

அனைத்து இன மக்களுக்கும் முரண்பாடற்ற தீர்மானத்தை வழங்குவோம். சாய்ந்தமருது நகர சபையும் அவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது. எந்த இனத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இந்த தீர்மானத்தை அரசாங்கம் எடுத்தது. 

அனைத்த இன மக்களும் ஏற்றுக் கொள்ளும் தீர்வுகளை மாத்திரமே வழங்க முடியும் என்றார்.