கோலிக்கு சுதந்திரத்தை கொடுங்கள்!! -மல்லையா வேண்டுகோள்-

ஆசிரியர் - Editor III
கோலிக்கு சுதந்திரத்தை கொடுங்கள்!! -மல்லையா வேண்டுகோள்-

பெங்களூரு ரோயல் சலஞ்சஸ் அணியை வழிநடத்துவதில் விராட் கோலிக்கு சுதந்திரத்தை கொழுங்கள் என்று பெங்களூரு அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் ஒரு தடவை கூட கோப்பையை வெல்லவில்லை. 

கடந்த மூன்று சீசனில் மிகவும் மோசமாக விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த 13-வது ஐ.பி.எல். தொடரிலாவது வாகை சூடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த அணிக்குரிய லோகோ புதிதாக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த மாற்றம் அணிக்கு ராசியாக அமையும் என்று அணி நிர்வாகம் நம்புகிறது.

 இது குறித்து பெங்களூரு அணியின் முன்னாள் உரிமையாளரான தொழிலதிபர் விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘புதிய லோகோ, சிங்கம் கர்ஜிப்பது போல் அருமையாக உள்ளது. ஆனால் கோப்பையை வென்று பெங்களூருவுக்கு கொண்டு வாருங்கள். 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இருந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கு வந்தவர், விராட் கோலி. அவர் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாகவும், அபாரமான திறமை கொண்டவராகவும் திகழ்கிறார். 

அணியை வழிநடத்துவதில் அவருக்கான சுதந்திரத்தை கொடுத்து அவரிடம் விட்டு விடுங்கள். எல்லா பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ரசிகர்களும் ஐ.பி.எல். கோப்பைக்காக நீண்ட காலம் காத்திருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு