SuperTopAds

முன்னணியின் வாக்கு வங்கியை புதிய கூட்டணியால் சரிக்க முடியாது!

ஆசிரியர் - Admin
முன்னணியின் வாக்கு வங்கியை புதிய கூட்டணியால் சரிக்க முடியாது!

விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகியுள்ள புதிய அரசியல் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் “பி“ அணி என்றும், கூட்டமைப்புக்கும் இந்தக் கூட்டணிக்கும் கொள்கையில் வித்தியாசமில்லையென்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'இன்றைக்கு, வடக்கு. கிழக்கில் இரண்டாவது பெரிய கட்சியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே இருக்கிறது. எங்களுடைய வளர்ச்சியைத் தடுப்பதற்காக, கொள்கை ரீதியாக எந்தவிதமான வித்தியாசமும் இல்லாமல் இன்னுமொரு மாற்று அமைப்பு என்று கூறிக் கொண்டு, ஒரு சிலர் செயற்படுகின்றனர்.

இவர்கள், வரவிருக்கும் தேர்தலில், எங்களுக்கு வரக் கூடிய அங்கீகாரத்தை ஏதோவொரு வகையில் குழப்புவதற்கு முயற்சிக்கிறார்கள். எவ்வாறாயினும், இந்தக் கூட்டணியால் நிச்சயமாக தங்களது வாக்கு வங்கியை சரிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.