தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

ஆசிரியர் - Editor2
தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிமுக எம்.பி.,

சசிகலா புஷ்பா கேள்விக்கு சட்ட இணை அமைச்சர் பி.பி.சவுத்ரி பதில் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் 2012ல் கோரிக்கையை பரிசீலித்து நிராகரித்தனர் என்றும், 

இதே கோரிக்கை 1997, 1999 என 2 முறை உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது என்றும் மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டதால் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வு தமிழக கோரிக்கையை நிராகரித்து விட்டது என அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

Radio
×