ஐ.பி.எல் போட்டியில் தோனி பங்கேற்பது உறுதி

ஆசிரியர் - Editor II
ஐ.பி.எல் போட்டியில் தோனி பங்கேற்பது உறுதி

நடைபெறவுள்ள ஜ.பி.எல் போட்டியில் மஹேந்திரசிங் டோணி நிச்சையமாக பங்கேற்பார் என்று பி.சி.சி.ஜ முன்னாள் தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

சேலத்தில் நடந்த கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 9 மணிக்கு திறந்து வைத்தார்.

இந்த விழாவில் முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா கோபிநாத் மற்றும் பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில், கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் பேசிய பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன், சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் தோனி கண்டிப்பாக பங்கேற்பார் என தெரிவித்துள்ளார்.

Radio
×