இந்தியாவிற்கு 274 இலக்கை நிர்ணையித்த நியூசிலாந்து

ஆசிரியர் - Editor II
இந்தியாவிற்கு 274 இலக்கை நிர்ணையித்த நியூசிலாந்து

இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போராட்டியில் நியூசிலாந்து அணி 274 ஓட்டங்களை இந்தியா அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஹாமில்டனில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மார்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் வலுவான தொடக்கத்தை அளித்தனர். நிக்கோல்ஸ் நிதானமாக விளையாட மறுமுனையில் கப்தில் அதிரடி காட்டினார். அவர் 8 போர்கள் மற்றும் 3 சிக்சர்கள் உள்பட 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் நிக்கோல்ஸ்சும் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்களில் ராஸ் டெய்லரை தவிர யாரும் நிலைத்து ஆடவில்லை. இதனால் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகள் விழுந்தன. 

ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 250 ரன்களை தாண்டுவது கடினம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெய்லரின் அதிரடியால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ராஸ் டெய்லர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் எடுத்தார். 

இறுதியில் 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்டுகள், சர்துல் தாகூர் 2 விக்கெட்டுகள், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என இந்திய அணி களமிறங்க உள்ளது. 

Radio
×