அதிகாலையில் நடந்த கோரம்..! நிறுத்தியிருந்த லொறியுடன் மோதி விபத்து, 17-19 வயதிற்குட்பட்ட 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி..

ஆசிரியர் - Editor
அதிகாலையில் நடந்த கோரம்..! நிறுத்தியிருந்த லொறியுடன் மோதி விபத்து, 17-19 வயதிற்குட்பட்ட 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி..

நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் இன்று அதிகலை இடம்பெற்றுள்ளது. 

கண்டி- திகன வீதியில் உள்ள மெனிக்கின்ன பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த நான்கு இளைஞர்களும் பணித்த வாகனம் வீதியில் 

நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் 17 மற்றும் 19 வயதிற்கிடைப்பட்ட திருகோணமலைஇ மஹியங்கனைஇ உகன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென 

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Radio
×