SuperTopAds

நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறிக்குள் எரிந்த நிலையில் சடலம்..! மன்னாரில் ஒளிந்திருந்த சாரதி கைது. மனைவிக்கு வலைவீச்சு..

ஆசிரியர் - Editor I
நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறிக்குள் எரிந்த நிலையில் சடலம்..! மன்னாரில் ஒளிந்திருந்த சாரதி கைது. மனைவிக்கு வலைவீச்சு..

லொறி நடத்துனரை கொலை செய்து சடலத்தை லொறிக்குள் போட்டு தீ வைத்து கொழுத்திய சம்பவ த்தில் தேடப்பட்டுவந்த லொறியின் சாரதி மன்னாாில் பதுங்கியிருந்த நிலையில் நேற்று இரவு பொலி ஸாா் கைது செய்திருக்கின்றனா். 

திருகோணமலை பாலம்போட்டாறு பகுதியில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறிக்குள் எாிந்த நிலையில் சடலம் ஒன்று கடந்த 1ம் திகதி மீட்கப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடாத்திய பொலிஸாா், 

சாரதியை மன்னாரில் வைத்து இன்றிரவு கைது செய்துள்ளனா். கைது செய்யப்பட்டவர் திருகோணமலை- மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி யோகநாதன் என்னும் 47 வயதுடைய நபர் எனவும் தெரியவருகின்றது.

இதேவேளை அவரது மனைவியான கௌரி மனோகரி என்பவரையும் தம்பலகாமம் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது.குறித்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கடந்த பெப்ரவரி முதலாம் திகதி பொலன்நறுவை- ஹிங்குராங்கொட பகுதியிலிருந்து லொறி ஒன்றில் சாரதியும் அவரது உதவியாளரும் திருகோணமலை நோக்கி வருகை தந்து கொண்டிருந்தபோது சாரதிக்கு தூக்கம் ஏற்பட்ட நிலையில் 

லொறியை நிறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில் அன்று அதிகாலை வீதியோரத்தில் குறித்த லொறியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக தம்பலகாமம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து 

அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் றுச்சிர நதீர பார்வையிட்டதையடுத்து சடலம் வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து சடலமாக மீட்கப்பட்டவர் லொறியின் சாரதியான திருகோணமலை-மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி யோகநாதன் என கூறப்பட்டது. இதேவேளை விசாரணைகளை மேற்கொண்ட தம்பலகாமம் பொலிசார் 

லொறியில் பயணித்த உதவியாளர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில் உதவியாளர் அதே பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஹேவகே விஜேதாஸ என்பவர் வீடு திரும்பவில்லை எனவும் தெரியவந்தது.

இந்நிலையில் லொறியில் சாரதியான கந்தசாமி யோகநாதன் உதவியாளரை லொறியில் வைத்து தீ மூட்டி எரித்துவிட்டு ஐந்து இலட்சம் ரூபாய் பணத்தையும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையையும் எடுத்துக்கொண்டு தலைமறைவாகி இருப்பதாக 

பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட தம்பலகாமம் பொலிஸார் தீ மூட்டி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டின் பேரில் லொறியில் பயணித்த சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து சந்தேக நபர் முல்லைத்தீவு மற்றும் மன்னார் பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில் அங்கு சென்றவர் பொலிஸ் குழுவினர் நேற்றிரவு ஏழு மணியளவில் சந்தேகநபரான கந்தசாமி யோகநாதனை கைது செய்துள்ளனர்.

ஆனாலும் அவருடன் உதவியாளராக லொரியில் சென்ற 52 வயதுடைய ஹேவகே விஜேதாஸ என்பவரது சடலம் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டிருந்தபோதிலும் அவரது உடலின் உடற்பாகங்கள் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் 

டிஎன்ஏ பரிசோதனைகளை முன்னெடுப்பதற்காக இன்னும் இரத்த மாதிரிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் றுச்சிர நதீர தெரிவித்தார்.அத்துடன் தனது உதவியாளராக சென்ற நபரை எதற்காக தீ மூட்டினார்?

 என்பது பற்றிய விபரங்கள் இன்னும் கிடைக்கவில்லை எனவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் கூறியுள்ளனர்.