மலையக மக்கள் விடயத்தில் ஜனாதிபதி, பிரதமா் விடாப்பிடி..! தோட்ட நிா்வாகம் வழங்காவிட்டால் அரசு வழங்கும் என மஹிந்த கருத்து..

ஆசிரியர் - Editor I
மலையக மக்கள் விடயத்தில் ஜனாதிபதி, பிரதமா் விடாப்பிடி..! தோட்ட நிா்வாகம் வழங்காவிட்டால் அரசு வழங்கும் என மஹிந்த கருத்து..

ஆட்சிக்குவரும்போது வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக 1000 ரூபாய் தினசாி சம்பளத்தை வழ ங்கும் விடயத்தில் தோட்ட முதலாளிகள் மறுத்தாலும் அதனை அரசாங்கம் செய்யும். என பிரதமா் மஹிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றில் கூறியிருக்கின்றாா். 

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமா்வில் நாடாளுமன்ற உறுப்பினா் அனுரகுமார திஸநாயக்க மேற்படி தோட்ட தொழிலாளா்களின் நாளாந்த சம்பள அதிகாிப்பு தொடா்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலக்கும்போதே பிரதமா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். 

இதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த, கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது, தோட்டத்தொழிலார்களுக்கு சம்பள அதிகரிப்பினை வழங்க அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். 

அத்தோடு இதற்கு தொழிற்சங்களும் இணக்கம் தெரிவித்துள்ளன என்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் வேதனத்தை வழங்குவதே இந்த அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்தவகையில் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அவர்களுக்கான வேதனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மஹிந்த குறிப்பிட்டார். இருப்பினும் இதற்கு பல தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. 

என செய்திகள் வெளியாகின என அனுரகுமார திஸாநாயக்க மீண்டும் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், சம்பள அதிகரிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் 

அதாவது 3 கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன எனத் தெரிவித்தார். இதேவேளை அவர்கள் இதனை மறுத்தால் அவற்றினை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி 

அனுர குமார திஸாநாயக்க மீண்டும் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த, அதற்கான அவசியம் தற்போது இல்லை என்றும் தோட்டத்தொழிலார்களுக்கான நாளாந்தம் 1000 ரூபாய் வேதனத்தை அரசாங்கம் வழங்கும் என கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு