இந்திய அணிக்கு அபராதம்!! -ஜ.சி.சி விதித்தது-

ஆசிரியர் - Editor III
இந்திய அணிக்கு அபராதம்!! -ஜ.சி.சி விதித்தது-

நியூசிலாந்துக்கு எதிரான 20-20 தொடரில் நேரஅனுமதி கடந்து பந்து வீசிய இந்திய அணிக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று நடந்தது. 

இதில் நேரஅனுமதி கடந்து பந்து வீசிய இந்திய அணிக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

ஐ.சி.சி.யின் விளையாட்டு வீரர்களுக்கான விதிகளின் பிரிவு 2.22ன்படி, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறும் ஒவ்வொரு ஓவருக்கும், வீரர்களின் போட்டி கட்டணத்தில் இருந்து 20% அபராதம் விதிக்கப்படும்.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி தரப்பில் ஓவர் ஒன்று அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வீசப்படவில்லை என நேர அனுமதி பரிசீலனையில் தெரிய வந்தது.  இதனை அடுத்து போட்டி நடுவர் கிறிஸ் பிராட் அபராதம் விதித்து உள்ளார்.  இதன்படி இந்திய அணிக்கான போட்டி கட்டணத்தில் இருந்து 20% அபராதம் விதிக்கப்பட்டது.

போட்டியில் நடந்த இந்த தவறு ரோகித் தரப்பில் ஒப்பு கொள்ளப்பட்டதுடன், விதிக்கப்பட்ட அபராதமும் ஏற்று கொள்ளப்பட்டது.  இதனால் முறைப்படியான விசாரணை நடத்துவதற்கான அவசியம் இல்லாமல் போனது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு