யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை முடக்க சதி செய்கிறதா கோட்டா அரசு..? வாக்குறுதிகளும் பொய்யாக்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை முடக்க சதி செய்கிறதா கோட்டா அரசு..? வாக்குறுதிகளும் பொய்யாக்கப்பட்டது..!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணிக்கும் பயணிகளுக்கு விதிக்கப்படும் இரு விமான நிலையங்கள் பயன்பாட்டு வரி ஒரு மாதத் திற்கு நீக்கு

உத்தரவை சிவில் விமான நிலைய அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா தெரிவித்தபோதும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக பயணிப்போருக்கு ஒரு விமான நிலையத்திற்கு ஒரு  வரி  விதிக்கும் நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைந்த்தின் ஊடாக பயணிக்கும் பயணிகளிற்கு மட்டும் இரு விமான நிலையங்களிற்கான வரி அறவிடுவது 

ஒரு மாத காலத்துற்குள் நீக்கப்படும் என  சிவில்விமான நிலைய அமைச்சர் பிரசன்ன தெரிவித்திருந்தார். அதாவது ஒரு பயணி எந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்றாரோ அதற்கு வரி அறவிடப்படுவது 

சர்வதேச வழமை ஆனால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைத்தில் மட்டும் குறித்த விமான நிலையத்திற்கான வரியுடன் நாட்டின் தலைநகரில் உள்ள விமான நிலையத்தின் வரியினையும் இணைத்து இரு விமான நிலையங்களிற்குமான வரி அறவிடப்படுகின்றமை தொடர்பில் விமான நிலையம் ஆரம்பித்தமை முதல் சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் கடந்த 2ம் திகதிய அமைச்சரவைக் கூட்டத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பில் அப்போது  கேட்டபோதே மேற்கண்டவாறு அமைச்சரால்  பதிலளிக்கப்பட்ட நிலையில் 

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகளிடத்தில் 15 கிலோ பொதி மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில் ஏனைய விமான நிலையத்தின் ஏடாக பயணிப்போருக்கு 30 கிலோ அனுமதிக்கப்படுகின்றமை தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது.

தற்போது இந்திய விமானங்களே சேவையில் ஈடுபடுவதனால் அதனை இலங்கை அரசினால் தீர்மானிக்க முடியவில்லை எனவும் விரைவில் இலங்கை விமானங்களும் சேவையில் ஈடுபட ஆரம்பிக்கும் அப்போது 30 கிலோவிற்கான ஏற்பாடுஙள் இடம்பெறும் எனவும் தெரிவித்திருந்தார். 

இவ்வாறு தெரிவித்து ஒருமாதம் கடந்தபோதும் யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் ஊடாக பயணிப்போருக்கு உள்ள நிலமை மட்டும் மாறவில்லை.

இதனால் குறித்த விடயத்தில் அரசும் அரசோடு இணைந்துள்ள அரசியல் கட்சிகளும் கவனத்தில் எடுத்து உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு