சீனாவிடமிருந்து பறித்து இந்தியாவிடம் கொடுக்கப்பட்ட யாழ்.மாவட்ட வீதி அபிவிருத்தி திட்டங்கள் கிடப்பில்..!

ஆசிரியர் - Editor I
சீனாவிடமிருந்து பறித்து இந்தியாவிடம் கொடுக்கப்பட்ட யாழ்.மாவட்ட வீதி அபிவிருத்தி திட்டங்கள் கிடப்பில்..!

யாழ்.குடாநாட்டிலுள்ள சில முக்கிய வீதிகளின் புனர மைப்பிற்கான ஒப்பந்தம் சீனாவிடமிருந்து இந்தியா வுக்கு மாற்றப்பட்டதால் புனரமைப்பு பயணிகள் கிட ப்பில் போடப்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணம்-மானிப்பாய், காரைநகர்- வழுக்கையாறு, புங்குடுதீவு- குறிகாட்டுவான், யாழ்ப்பாணம்- பொன்னாலை- பருத்தித்துறை ஆகிய பெரு வீதிகளின் மறுசீரமைப்பு பணிகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட பின்னர் அவை கைவிடப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த வீதிகளின் மறுசீரமைப்பு பணிக்கான ஒப்பந்தம் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பின்னர் இந்திய அரசு கரிசனை செலுத்தியது. அதன்பின்னர் இந்திய நிறுவனத்துக்க இவற்றை வழங்க கடந்த ரணில் அரசின் அமைச்சரவை தீர்மானித்திருந்தது. 

இந்தியா அதனைப் பொறுப்பெடுத்த பின்னர் மறுசீரமைப்பு பணிகள்  அப்படியே  கைவிடப்பட்டுள்ளன. அடுத்தகட்ட நகர்வுகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.  

யாழ்ப்பாணம், மானிப்பாய், கரைநகர், வழுக்கையாறு புங்குடுதீவு, குறிகட்டுவான், யாழ்ப்பாணம் பொன்னாலை பருத்தித்துறை வீதிகளின் மறுசீரமைப்புத் மொடர்பில் கடந்த 4 ஆண்டுகளாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பல்வேறு அபிவிருத்தித்திட்ட கூட்டங்களில் ஆராயப்பட்டன. 

இந்த வீதிகளை மறுசீரமைப்பதற்கான கேள்வி கோரல்கள் மேற்கொள்ளப்பட்ட. சீன நிறுவனம் குறைந்த தொகைக்கு பணிகளை முன்னெடுக்க முடியும் என்று கூறியது. சீன நிறுவனத்துக்கு வீதி மறுசீரமைப்புப் பணிக்கான ஒப்பந்தத்தை  வழங்க அமைச்சரவை தீர்மானித்தது. 

இதன்பின்னர் இந்தியா இதில் தலையீடு செய்து இந்தியாவின் கரிசனையையடுத்து சீனாவிடமிருந்து மீளப்பெறப்பட்டு இந்தியாவுக்கு அவற்றை ஒப்படைக்க அரசு தீர்மானித்தது. அதற்கான அமைச்சரவை பத்திரமும் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையின் அனுமதியும் பெறற்ப்பட்டிருந்தது. 

இந்தியா இதனைப் பொறுப்பேற்ற பின்னர் சில நகர்வுகள் இடம்பெற்றன. ஆயினும் ஆட்சி மாற்றத்துடன் இந்த பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு