மீண்டும் சூப்பர் ஓவரில் தோற்ற நியூசிலாந்து

ஆசிரியர் - Editor III
மீண்டும் சூப்பர் ஓவரில் தோற்ற நியூசிலாந்து

நியூசிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. இந்திய அணியில் ரோகித் சர்மா, ஜடேஜா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. சைனி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக கேன் வில்லியம்சன் களம் இறங்கவில்லை. டிம் சவுத்தி கேப்டனாக செயல்படுகிறார். டிம் சவுத்தி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி முதிலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணைக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்களை பெற்றது. 

இதில் மணிஷ் பாண்டே 50 ஓட்டங்களை பெற்று இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்திருந்தார். பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் இஷ் சோதி 3 விக்கெட்டும், பென்னட் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்தும் 20 ஓவரில் 165 ஓட்டங்களையே பெற்றது. இதனால் சுப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது. 

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 14 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய ஒரு ஓவரில் 17 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு