யாழ்.போதனா வைத்தியசாலையில் விசேட மருத்துவர் குழு, நோயாளர் விடுதி தயார் நிலையில்..! மக்கள் பயப்பட தேவையில்லை..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் விசேட மருத்துவர் குழு, நோயாளர் விடுதி தயார் நிலையில்..! மக்கள் பயப்பட தேவையில்லை..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களை பாதுகாத்து சிகிச்சை வழங்க தேவையான சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

சீனாவில் தற்போது கொரனோ தொற்று அபாயம் ஏற்பட்டதனையடுத்து உலகின் பல பகுதிகளிலும் அந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கைநிலும் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதனால் அவ்வாறான தொற்று ஏற்பட்டால் அதனை எதி்கொள்ளக் கூடியதான 12 வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சு இனம்கண்டது. 

இதில் எமது வைத்தியசாலையும் ஒன்று. இந்நிலையில் வடக்கிலோ அல்லது யாழ்.குடாநாட்டிலோ அவ்வாறான சந்தேகத்திற்கிடமாக எவராவது காணப்பட்டால் யாழ்.போதனா வைத்தியசாலையிலே அனுமதிக்க வேண்டிய நிலமை ஏற்படலாம் . 

அவ்வாறான நிலமை ஏற்பட்டால் ஒரே தடவையில் உச்ச பட்சமாக 10 பேர் இனம் கணப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு ஏற்ற ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளோம்.

அதேநேரம் இதற்காகவே ஓர் விசேட மருத்துவக் குழுவினையும் தயார் செய்துள்ளோம். அவ்வாறு சந்தேகத்திற்கிடமான நோயாளி இனம் கானப்பட்டாள் அவரை இந்த விசேட மருந்துவக் குழு ஆய்விற்கு உட்படுத்தும். 

அதன் பின்னர் அவரது குருதியின் மாதிரியை எடுத்து பகுப்பாய்விற்காக அனுப்பி உச்ச பட்சமாக 48 மணி நேரத்திற்குள் உறுதியான முடிவினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு