இந்திய - நியூஸிலாந்து 3வது 20-20 இன்று: தொடரை வெல்லுமா இந்தியா

நியூசிலாந்துக்கு எதிரான 20-20 போட்டிகளின் 3-வது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்நிலையில் 3வது போட்டியையும் வென்று தொடரை கப்பற்றும் தீவிர முயற்சியில் இந்திய அணி தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளது.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை இந்த ஆட்டம் அவர்களுக்கு வாழ்வா-சாவா? மோதலாகும். இதிலும் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்த முறை கூடுதல் எச்சரிக்கையுடன் விளையாடுவார்கள்.
இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.