நாகர்கோவிலில் இராணுவம் மீது தாக்குதல்! கைது செய்யப்பட்ட 8 தமிழ் இளைஞர்களுக்காக இன்று நீதிமன்றம் செல்கிறார் சுமந்திரன்..

ஆசிரியர் - Editor I
நாகர்கோவிலில் இராணுவம் மீது தாக்குதல்! கைது செய்யப்பட்ட 8 தமிழ் இளைஞர்களுக்காக இன்று நீதிமன்றம் செல்கிறார் சுமந்திரன்..

யாழ்.வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக் குமிடையில் உருவான முறுகல் நிலையினை தொடர்ந்து பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில்,

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடமாகா ணசபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் ஆகியோர் நாகர்கோவில் மக்களை சந்தித்து கலந்துரையாடியிருக்கின்றனர்.

இந்த கலந்துரையாடல் குறித்து வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது பொங்கல் தினத்தில் நடைபெற்ற சம்பவம் வருந்தத்தக் க தறவான சம்பவமாகும். அதற்காக கண்மூடித்தனமான கைதுகள்

மற்றும் கைது செய்யப்படும் இளைஞர்கள் மீதான தாக்குதல்கள் சகித்துக் கொள்ள முடியாதவை என்பதை நாங்கள் மக்களுக்கு கூறியிருக்கின்றோம். இதன்போது மக்கள் பல விடயங்களை கூறியுள்ளனர். குறிப்பாக அச்சமாக உள்ளதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் அமைதியாகவும் அச்சப்படாமலும் இருக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கின்றார். மேலும் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தொடர் பான வழக்கு இன்று பருத்துறை நீதிமன்றில் இடம்பெறவுள்ள நிலையில்,

தாம் மன்றில் முன்னிலையாவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மக்களுக்கு நம்பிக்கையளித்திருக்கின்றார். மேலும் 8 இளைஞர்கள் இதுவரை கைது செய்யப்ப ட்டிருக்கின்றனர். பிரதானமாக தேடப்படும் இளைஞன் தொடர்ந்தும்

தலைமறைவாக உள்ளார். மேலும் ஒரு இளைஞன் கைது செய்யப்படும்போது இராணுவம் தாக்கியதில் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு