SuperTopAds

பதவியேற்ற மறுநாளே சிறையில் உள்ள இராணுவத்திற்கு விடுதலை..! சுயாதீன நீதித்துறை பற்றி பேச ஜனாதிபதி கோட்டாவுக்கு அருகதையில்லை.

ஆசிரியர் - Editor I
பதவியேற்ற மறுநாளே சிறையில் உள்ள இராணுவத்திற்கு விடுதலை..! சுயாதீன நீதித்துறை பற்றி பேச ஜனாதிபதி கோட்டாவுக்கு அருகதையில்லை.

இலங்கையில் நீதித்துறை சுயாதீனமாக உள்ளதாக கூறுவதற்கு ஜனாதிபதி கோட்டாவுக்கும் அவருடைய ஆட்சியில் உள்ளவா்களுக்கும் தகுதி கிடையாது. காலங்கள் கடந்தாலும் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை பெறுவோம்.

மேற்கண்டவாறு பரந்தன் பகுதியில் இடம்பெற்ற சனசமூக நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கூறி யிருக்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

எமக்கு எதிராக பல குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளது. அதற்று நீதியை தேடுகின்ற சமூகமாக நாங்கள் இருக்கின்றோம். அதிலே நாங்கள் கவனம் உள்ளவர்களாகவும் உள்ளோம் எனவே நீதியை நிலைநாட்டியே தீரும் வைராக்கியம் எமக்குண்டு.

ஆனால் எத்தனை தசாப்தங்கள் ஆனாலும் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு நீதியை கண்டே தீருவோம்.கடந்த ஐந்து வருட காலத்தில் மீள் எழுச்சிக்காக எங்களுடன் இணைந்து பயணிக்க கூடிய அரசாங்கம் இருந்ததன் காரணத்தினாலே 

அதற்கு நாங்கள் ஆதரவு கொடுத்தோம். ஏனெனில் அதற்கு முன்பிருந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் எதையும் செய்ய முடியாத எங்களை அடக்கி ஒடுக்குகின்ற ஒரு அரசு இருந்தது. அதை அகற்றி நாங்கள் பயணிக்கக்கூடிய வகையில் ஓர் அரசை 

அமைப்பதற்கு நாங்கள் உதவி செய்தோம். அதை பாதுகாத்தோம். அதுவும் நாங்கள் எதிர்பார்த்த எல்லாவற்றைம் செய்யவில்லை. ஆனால் ஒரு சுதந்திரமான, திறந்த ஒரு சூழலை எங்களிற்கு உருவாக்கி கொடுத்தது. பயமில்லாமல் வாழக்கூடிய 

ஓர் சூழ்நிலை உருவாக்கப்பட்டிருந்தது. அக்காலப்பதியில் சில சில விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. குறித்த விசாரணைகளில் அதிகளவில் படையினரும், புலனாய்வாளர்களும் இருந்தனர். இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு 

நாட்டை காட்டிக்கொடுப்பதாகவும், படையினரை காட்டிக்கொடுப்பதாகவும் பிரச்சாரங்களை செய்தது. ஜனாதிபதியாக பொறுப்பேற்று மறுநாள் படையினரை விடுவிப்பதாக ஜனாதிபதி அன்று தெரிவித்திருந்தார். இவ்வாறு தற்போது பலர் 

விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விடுவிப்பினை இலக்காக கொண்டே ஜனாதிபதி ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது, அந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எவ்வாறு வரும் என அறிந்தே இவ்வாறு நீதியில் தலையீடு செய்து பலரை விடுவிக்கின்றனர். 

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதவாறு தடுக்கின்றனர். நீதித்துறை சுயமாக செயற்படாதவாறு பலர் செயற்படுகின்றனர், நீதித்துறையை சுயாதீனமாக செயற்பட விடுகின்றார்கள் இல்லை என பலர்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது. 

முக்கியமாக வழக்குகள் இவ்வாறு நடத்தப்படாது தடை செய்யப்படுமாக இருந்தால் இதைவிட நீதித்துறையில் தலையீடு வேறு எதுவுமாக இருக்க முடியாது, பல சம்பவங்கள் இருக்கின்றன. உங்களுடைய பிரதேசங்களிலேயே பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

அவற்றையெல்லாம் தவிர்த்து கண்துடைப்பிற்காக கொழும்பிலே கடத்தப்பட்ட காரணத்தினாலே அந்த ஒருவழக்கு மட்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது. அந்த ஒரு வழக்குகூட நேரடியாகவே இராணுவம் கடற்படை என்று சொல்லி 

படைத்தரப்பை குற்றம்சாட்டி அதைக்கூட தொடர்ந்தும் நடத்த விடாமல் தடுக்கின்ற செயற்பாடு புதிய ஆட்சியிலே இருக்கின்றது. இது அவர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்து செய்கின்ற கைங்கரியமாக இருக்கின்றது. 

இது இப்படியாக நடக்குமாக இருந்தால், இந்தநாட்டிலே நீதித்துறை சுயாதீனமானது என்று சொல்வதற்கு இந்த ஆட்சியாளர்களிற்கு அருகதை கிடையாது.