நியூஸிலாந்தை வீழ்த்திய இந்தியா!!

ஆசிரியர் - Editor III
நியூஸிலாந்தை வீழ்த்திய இந்தியா!!

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதாவது 20-20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

5 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி இன்று அக்லந்தில் நடந்தது. 

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய  அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 203  ஓட்டங்களை குவித்தது.

204 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 7 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மிட்செல் சாண்டனரின் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதனால் இந்திய அணியின் முதல் விக்கெட் 16 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. 2 ஆவது விக்கெட்டுக்காக விராட் கோலி மற்றும் ராகுல் களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 57 ஓட்டங்களையும், 9 ஓவர் முடிவில் 107 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது.

இதன் பின்னர் 9.6 ஆவது ஓவரில் ராகுல் மொத்தமாக 27 பந்துகளை எதிர்கொண்டு 3சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டத்துடன் இஷ் சோதியின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவரின் வெளியேற்றத்தையடுத்து விராட் கோலியும் 11.1 ஆவது ஓவரில் மொத்தமாக 32 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்க, இந்திய அணி 121 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்தது.

தொடர்ந்து களமிறங்கிய சிவம் டூப் 13 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப 5 ஆவது விக்கெட்டுக்காக மணிஷ் பாண்டே மற்றும் ஸ்ரேஸ் அய்யர் ஆகியோர் ஜோடி சேர்ந்து வான வேடிக்கை காட்டி வந்தனர்.

இதனால் இந்திய  அணி 19 ஆவது ஓவரில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து, நியூஸிலாந்து அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைந்தது. ஸ்ரேஸ் அய்யர் மொத்தமாக 29 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களுடனும், மணிஷ் பண்டே 14 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரில் இந்தியா 1:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு