யாழ்.வலிகாமம் கிழக்கில் 155.62 கிலோ மீற்றா் நீளமான 12 வீதிகள் காப்பெற் வீதிகளாக மாறுகிறது..!
யாழ்.வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக பகுதியில் ஐ றோட்ட செயற்றிட்டத்தின் கீழ் 155.62 கிலோ மீற்றா் நீளமான 12 வீதிகள் காப்பெற் வீதிகளாக புனரமைப்பு செய்வதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் இடம்பெற்று வருவதாக தொியவருகின்றது.
காப்பெற் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ள வலிகாமம் கிழக்கு வீதிகள் .வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் ஐ றோட் திட்டத்தின் கீழ் பின்வரும் வீதிகள் விரைவில் காப்பெற் வீதிகளாக புனரமைப்பு செய்யப்படவுள்ளன. இதற்கான ஆரம்ப பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதன்படி வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பராமரிப்பிற்குட்பட்ட நீர்வேலி வடக்கு கிராம அலுவலர் பிரிவு ஜே-269, நீர்வேலி மேற்கு கிராம அலுவலர் பிரிவு ஜே-270, அச்செழு கிராம அலுவலர் பிரிவு ஜே-279 ஆகியவற்றின் ஊடாகச் செல்வும் 3.86 கிலோமீற்றர் நீளம்கொண்ட நீர்வேலி குறுக்குறோட் - புன்னாலைக் கட்டுவன் வீதி,
உரும்பிராய் கிழக்கு ஜே-266 கிராம அலுவலர் பிரிவு, ஊரெழு ஜே-267 கிராம அலுவலர் பிரிவு, நீர்வேலி தெற்கு ஜே -268 கிராம அலுவலர் பிரிவு , நீர்வேலி மேற்கு ஜே-270 கிராம அலுவலர் பிரிவுகளுக்கூடாகச் செல்லும் கலைவாணி சனசமூக நிலையம், கரந்தன் வீதி ஆகியவற்றினூடான 4.34 கிலோமீற்றர் நீளமான
ஊரெழு- நீர்வேலி வீதி என்பனவும் காப்பெற் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளன.மேலும் வலி.கிழக்கு பிரதேச சபையின் பராமரிப்பிற்குட்பட்டகோணாவலை வீதி 2.47 கிலோமீற்றர் , புத்தூர் மேற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள ஜே-273 , சிவன் வீதி 1.1 கிலோமீற்றர்,
கோப்பாய் மத்தி ஜே-261 கிராம அலுவலர் பிரிவு, ஜே-265 உரும்பிராய் தெற்கு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 1.12 கி.மீற்றர் நீளமான ஐயன்காடு மயானவீதி, அச்செழு மேற்கு ஜே-287 கிராமஅலுவலர் பிரிவுககுட்பட்ட 41 கிலோமீற்றர் நீளமான இராசவீதி தோப்பு வீதி,
பத்தமேனி ஜே -281 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 1.15 கிலோமீற்றர் நீளமான பாரதிவீதி, கோப்பாய் தெற்கு ஜே-260 கிராம அலுவலர் பிரிவு, கோப்பாய் மத்தி (ஜே-261) கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 0.53 கி.மீற்றர் நீளமான இராசவீதி கண்ணன் ஒழுங்கை, சிறுப்பிட்டி கிழக்கு ,
ஜே-271 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 96 கிலோமீற்றர் நீளமான செல்லப்பிள்ளையார் வீதி , உரும்பிராய் தெற்கு 265 கிராம அலுவலர் பிரிவு, உரும்பிராய் கிழக்கு ஜே-266 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்டஉரும்பிராய் கிழக்கு பலாலி வீதியிலிருந்து கரந்தன், நீர்வேலி சிவன் வீதி ,
செல்லப்பா வீதி 0.85 கிலோமீற்றர் நீளம், புத்தூர் வடக்கு ஜே-274, ஆவரங்கால் மேற்கு ஜே-277 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 1.65 கிலோமீற்றர் நீளமான வீதி வான்கைவீதி, நீர்வேலி வடக்கு ஜே-269 கிராம அலுவலகர் பிரிவில் மோதிரகேணி வீதி மற்றும் அதனோடு இணைந்த
நீர்வேலி வடக்கு றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு செல்லும் 1.55 கிலோமீற்றர் நீளமான வீதிகளும் விரைவில் காப்பெற் வீதிகளாக புனரமைப்பு செய்யப்படவுள்ளன. தற்போது ஆரம்ப நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.