இலங்கை வரும் இங்கிலாந்து அணி!! -2 டெஸ்ட் போட்டிகளில் பங்கு கொள்ளும்-

ஆசிரியர் - Editor II
இலங்கை வரும் இங்கிலாந்து அணி!! -2 டெஸ்ட் போட்டிகளில் பங்கு கொள்ளும்-

டெஸ்ட் தொடரொன்றில் விளையாடுவதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு வருகைத்தர உள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐ.சி.சியின் டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் போட்டியாக இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் அமையவுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டி- மார்ச் 19 தொடக்கம் 23 வரை- காலி மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி- மார்ச் 27 தொடக்கம் 31 வரை- கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானம் நடைபெறவுள்ளது என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

Radio