இலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி இந்திய ரூபாய் வழங்கும் இந்திய மத்திய பிரதேச அரசு..! ஜனாதிபதி இணக்கம்.

ஆசிரியர் - Editor I
இலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி இந்திய ரூபாய் வழங்கும் இந்திய மத்திய பிரதேச அரசு..! ஜனாதிபதி இணக்கம்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சீதை கோவிலின் புனரமைப்புக்காக இந்தியாவின் மத்திய பிரதேச அரசு 5 கோடி ரூபாய் நிதியை வழங்குவதற்குள்ளது. 

இந்திய மத்திய பிரதேச மாநில கலாசாரத்துறை அமைச்சர் சர்மா தலைமையிலான குழுவினர் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது நுவரெலியாவிலுள்ள சீதையம்மன் கோவில் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீதையம்மன் கோவிலை புனரமைப்பதற்கு மத்திய பிரதேச அரசின் வரவு செலவுத் திட்டத்தில் 5 கோடி இந்திய ரூபா ஒதுக்கப்பட்டதாக சர்மா இதன்போது தெரிவித்துள்ளார்.

ஆலயத்தின் புனரமைப்புப் பணிகளை விரைவில் ஆரம்பிக்குமாறு அவர் இதன்போது கேட்டுக்கொண்டதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு