ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்..! காணி உறுதி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மக்களுக்கு இணையவழி வழங்கும் திட்டம்.

ஆசிரியர் - Editor
ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்..! காணி உறுதி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மக்களுக்கு இணையவழி வழங்கும் திட்டம்.

மக்கள் அரச திணைக்களங்களுக்கு அலைவதையும், இலஞ்சம், ஊழல் போன்றவற்றைத் தடுத்து வினைத்திறனான சேவையை மக்களுக்கு வழங்க அரச திணைக்களங்கள் அனை த்தையும் ஒரு தரவு வலையமைப்புக்குள் கொண்டுவர ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்கள் சேவை வழங்குநர்களிடம் செல்வதற்கு பதிலாக இணையத்தினூடாக குறித்த சேவைகள் மற்றும் அனுமதிகளை வழங்கும் முறையொன்றினை விரைவில் உருவாக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணித்துள்ளார். 

இன்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் தகவல் தொடர்பாடல் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இந்தப் பணிப்புரை வழங்கினார். இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு 

அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது சகல அரச நிறுவனங்களிலும் காணப்படும் தரவுகள் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனத்தின் முழுப் பங்களிப்புடன் ஒன்று திரட்டப்படும். 

மக்களுடன் மிக நெருக்கமாக செயற்படும் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் முன்னுரிமையளித்து இத்தரவு வலையமைப்பு உருவாக்கப்படும். இந்த புதிய முறையில் தொழிநுட்பம்  மற்றும் இணைய வழி பாவனையினூடாக 

அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச்சீட்டு, பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை பதிவு செய்தல் மற்றும் அரச காணி உறுதிகள் உள்ளிட்ட பல துறைகளில் உடனடி சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தரவுகளை ஒரே வலையமைப்பில் கொண்டு வருவதனூடாக நேரத்தை மீதப்படுத்தி வினைத்திறனின்மை மற்றும் ஊழல் ஆகியவற்றைத் தடுக்க முடியுமென்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.வரி அறவிடுதல் முதல் ஓய்வூதிய 

கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் வரையான அனைத்து துறைகளின் செயற்பாடுகளையும் தன்னிச்சையாக நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளித்தல் இதன் முதன்மை எதிர்பார்ப்பாகும். 

அனைத்து தரவுகளும் ஒன்று திரட்டப்பட்டிருப்பதனால் நாட்டிற்கு அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடிய தீர்மானங்களை மேற்கொள்ளும்போது சரியான பகுப்பாய்வினை  மேற்கொள்ள முடியுமென ஜனாதிபதி வலியுறுத்தினார். 

பொதுமக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் அரச நிறுவனங்களில் ஏற்படும் தாமதங்களை உடனடியாக தவிர்த்துக் கொள்ளவும் இதனூடாக வாய்ப்பு கிடைக்கும்.1919 அரச தகவல் மையத்தினூடாக மக்களுக்கு தகவல்களை வழங்கும் 

செயற்பாட்டினை மீண்டும் செயற்திறனாக்குதல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. நாட்டில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக பல நிறுவன பிரதானிகளாக குறித்த விடயம் சார்ந்த நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களுள் பெரும்பாலானவர்கள் சம்பளமின்றி நாட்டுக்காக சேவையாற்ற அர்ப்பணிப்புடன் உள்ளனர். அவர்களுக்கு அரச அதிகாரிகள் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார். 

துரிதமாக செயற்படுத்தப்பட வேண்டிய பல நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிக்கும்போது அந்தந்த துறைகளில் திறமைமிக்கவர்கள்  தொடர்பில் தகவல்கள் உள்ளடங்கிய கோவை ஒன்று காணப்படாமை பெரும் தடையாக 

அமைந்துள்ளதென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அரச சேவையில் உள்ள திறமையானவர்களை மிகத் துரிதமாக இனங்கண்டு திறன்கள் குழுவொன்றினை உருவாக்குவதற்கான தேவையை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியதுடன், 

அவ்வாறானவர்களை உடனடியாக இனங்கண்டு குறித்த குழு தொடர்பான பரிந்துரைகளை விரைவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் பணிப்புரை வழங்கினார்.தகவல் தொழிநுட்பம் மற்றும் தத்தமது துறைகளில் உள்நாட்டு, 

வெளிநாட்டு பயிற்சிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதனூடாக திறமையான அரச சேவையாளர்களையும் சிறந்த அரச சேவையினையும் உருவாக்க முடியுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். என்றுள்ளது.

Radio