SuperTopAds

ஆவுஸ்திரேலியாவிற்கு அதிரடி காட்டும் இந்தியா!!

ஆசிரியர் - Editor III
ஆவுஸ்திரேலியாவிற்கு அதிரடி காட்டும் இந்தியா!!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. நாணைய சுழல்ச்சியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. 

அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே பந்துக்குபந்து ரன்கள் அடித்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் சீரான வகையில் உயர்ந்தது.

 இந்தியா 8.3 ஓவரில் 50 ஓட்டங்களை எட்டியது. அணியின் பெறுபேறு 13.3 பந்து பரிமாற்றத்தில் 81 ஓட்டமாக இருக்கும்போது ரோகித் சர்மா 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினர்.

தவான் 60 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 17.1 ஓவரில் 100 ஒட்டத்தை தொட்ட இந்தியா 24.5 ஓவரில் 150 ஓட்டங்களை தொட்டது.

29-வது பந்து பரிமாற்றத்தை கேன் ரிச்சர்ட்சன் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை தவான் பவுண்டரிக்கு விராட்டினார். இதனால் 96 ரன்னைத் தொட்டர். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 28.4 பந்து பரிமாற்றத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்களை எடுத்திருந்தது.