நாகா்கோவிலில் கடற்றொழிலுக்கு சென்றவா்கள் மீது இராணுவம் தாக்குதல்..! சுற்றிவளைப்பு தளா்த்தப்பட்டது, கைதான இளைஞா்களுக்கு விளக்கமறியல்..

ஆசிரியர் - Editor
நாகா்கோவிலில் கடற்றொழிலுக்கு சென்றவா்கள் மீது இராணுவம் தாக்குதல்..! சுற்றிவளைப்பு தளா்த்தப்பட்டது, கைதான இளைஞா்களுக்கு விளக்கமறியல்..

நாகா்கோவில் பகுதியில் படையினா் மீது இளைஞா்கள் சிலா் தாக்குதல் நடாத்திய சம்பவத்தையடுத்து அப்பகு தியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்த படையினா் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், 4 பொதுமக்க ள் மீது நேற்று இரவு படையினா் தாக்குதல் நடத்தியதாக மக்கள் கூறியுள்ளனா். 

நேற்று முன்தினம் அதிகாலை படையினா் மீது இளைஞா்கள் சிலா் தாக்குதல் நடாத்தியிருந்தனா். இந்த சம்பவ த்தையடுத்து நாகா்கோவில் பகுதியில் படையினா் சுற்றிவளைப்பை மேற்கொண்டு நேற்று மாலை வரையில் சுற்றிவளைப்பு நீடித்திருந்தது. இந்நிலையில் நேற்று மாலை கடற்றொழிலுக்கு சென்ற

4 பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல் நடத்தியதாகவும், அதனையடுத்து சுற்றிவளைப்பு தளா்த்தப்பட்டிரு ப்பதாகவும் மக்கள் கூறுகின்றனா். இதேவேளை கைது செய்யப்பட்ட 4 இளைஞா்கள் நேற்று மாலை நீதிபதி மு ன்னிலையப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றாா்கள். 

Radio
×