மணல் கொள்ளையா்களுடன் பொலிஸாா் மிக நெருக்கம்..! மணல் கொள்ளை குறித்து பொலிஸாருக்கு கூறினால் உடனேயே கொலை அச்சுறுத்தல் வருகிறது..

ஆசிரியர் - Editor I
மணல் கொள்ளையா்களுடன் பொலிஸாா் மிக நெருக்கம்..! மணல் கொள்ளை குறித்து பொலிஸாருக்கு கூறினால் உடனேயே கொலை அச்சுறுத்தல் வருகிறது..

புதுக்குடியிருப்பு- மருதமடு மற்றும் கள்ளவெட்டை குளங்களில் இடம்பெற்றுவரும் மணல் கொள்ளை நடவடிக் கை தொடா்ந்து இடம்பெற்றுவரும் நிலையில், மணல் கொள்ளை தொடா்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப் பாடு கொடுப்பவா்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக மக்கள் கூறியுள்ளனா். 

புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் 17.01 இன்றைய நாள் இடம்பெற்ற நிலையில், அதில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் அவர்கள் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,குறிப்பாக மருதமடுக் குளக் கட்டின் அருகே மண் அகழ்வு இடம்பெறுவதனால், 

குளம் உடைப் பெடுக்கும் நிலை இருக்கின்றது. குறித்த குளம் உடைப்பெடுத்தால், இக் குளத்தின் கீழ் சுமார் ஏக்கர் 340 ஏக்கர் வயல் நிலங்களில் விவசாயம் செய்கின்ற விவசாயிகள் பாதிப்படைவதுடன், கைவேலி, மருதமடு, ஆத்திப் பிலவு, கோம்பாவில், பாண்டியன்வெளி, தேவிபுரம் உட்பட்ட பல கிராமங்களும் 

நீரில் மூழ்கும் அபாய நிலை உருவாகும் எனவும் தெரிவித்தனர்.அதேவேளை கள்ளவெட்டை குளத்தின் குளக்கட்டிற்கு அருகிலும் இவ்வாறு பாரிய அளவில் மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.இந்த சட்ட விரோத செயற்பாடானது இரவுபகலாக தொடர்ந்து இடம்பெறுவதுடன், 

அகழப்படும் மணல் பல கனகரக வாகனங்களின் மூலம் வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த செயற்பாடு தொடர்பில் புதுக்குடியிருப்பு போலீசாரிடம், நீர்ப்பாசனத் திணைக்கள உதியோகத்தர்அரசஉதியோகத்தர் மற்றும், 

மீனவ சங்கத் தலைவர் ஆகியோர் முறைப்பாடு செய்தநிலையில்.இவ்வாறு சட்டத்திற்கு முரணாக மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள், முறைப்பாடு செய்தவர்களுக்கு தொலைபேசியுடாக கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்கொலை மிரட்டல் தொர்பில் பொலீசாரிடம் 

சம்பந்தப்படடவர்கள் முறையிட்டபோதும், போலீசார் இதுவரையில் எந்த வித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் மேலும் கருத்து தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு