இராணுவம் மீது தாக்குதல் நடாத்திய இளைஞனை ஒப்படைக்கும் வரை விடமாட்டோம்..! இரு சிப்பாய்கள் வைத்தியசாலையில், சுற்றிவளைப்பு தொடர்கிறது..

ஆசிரியர் - Editor
இராணுவம் மீது தாக்குதல் நடாத்திய இளைஞனை ஒப்படைக்கும் வரை விடமாட்டோம்..! இரு சிப்பாய்கள் வைத்தியசாலையில், சுற்றிவளைப்பு தொடர்கிறது..

வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்திய ஒரு இளைஞன் தலைமறைவாகியிருக்கும் நிலையில், இராணுவம் விடாப்பிடியாக கிராமத்தை சுற்றிவளைத்து மக்களை வெளியேறவிடாது தடுத்து வருகின்றனர். 

நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினருக்கும் இளைஞர்கள் சிலருக்கும் இடையில் தர்க்கம் உருவான நிலையில், இராணுவத்தினர் மீது இளைஞர்களும், இளைஞர்கள் மீது இராணுவத்தினரும் தாக்குதல் நடாத்தியிருக்கின்றனர். இதனையடுத்து இராணுவம் குவிக்கப்பட்டு 

கிராமத்தை சுற்றிவளைத்த இராணுவத்தினர் 4 இளைஞர்களை கைது செய்திருந்தனர். எனினும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் ஒரு இளைஞன் தலைமறைவாகியிருக்கும் நிலையில் அந்த இளைஞன்கைது செய்யப்படும்வரை தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு தொடரும் 

என கூறியிருக்கும் இராணுவத்தினர் தொடர்ந்து கிராமத்தை சுற்றிவளைத்துள்ளதுடன், இன்று மாலை மேலதிகமாக இராணுவத்தை குவித்து பொதுமக்களை வெளியேறவிடாது தடுத்துவருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களும், இரு இராணுவத்தினரும் 

பருத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் இராணுவம் தமது இயல்பு வாழ்வை பாதிக்க செய்துள்ளதாக கூறியிருக்கும் மக்கள் இது குறித்து பொறுப்புவாய்ந்தவர்கள் அமைதியாக இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Radio