யாழ்ப்பாணம்- கொழும்பு இடையிலான பயணிகள் புகைரதம் சாவகச்சேரி- சங்கத்தானையில் பழுது..! 4 மணி நேரம் அந்தரித்த மக்கள்..
யாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் காலை 6.30 மணிக்கு சேவையில் ஈடுபடும் பயணிகள் புகைரதம் சாவகச்சேரி- சங்கத்தானை பகுதியில் பழுதடைந்த நிலையில், புதிய புகைரதம் கொண்டுவரப்பட்டு காலை 10.30 மணிக்கு மீண்டும் கொழும்பு பயணமாகியுள்ளது.
காலை 6.30 மணிக்கு புறப்பட்ட புகைரதம் 7.15 மணியளவில் சங்கத்தானை பகுதியில் பழு தடைந்து நின்றுவிட்டது. இதனையடுத்து பயணிகள் அந்தரித்துக் கொண்டிருந்த நிலையில் உடனடியாக செயற்பட்ட புகைரத திணைக்களம் யாழ்ப்பாணத்திலிருந்துமற்றொரு புகைரத இயந்திரத்தை வரவழைத்து
பழுதடைந்த புகைரதம் சாவகச்சேரி புகைரத நிலையத்திற்கு இழுத்துவரப்பட்டு அங்கு பழுதடைந்த இயந்திரம் கழற்றிவிடப்பட்டு புதிதாக கொண்டுவரப்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்டு கொழும்புக்கு பயணமானது. இதனால் யாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக
போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.