கழிவு பொருட்களில் மோட்டாா் சைக்கிள் தயாாித்த கிளிநொச்சி மாணவன்..!

ஆசிரியர் - Editor I
கழிவு பொருட்களில் மோட்டாா் சைக்கிள் தயாாித்த கிளிநொச்சி மாணவன்..!

உருத்திரபுரம்- எள்ளுக்காடு கிராமத்தை சோ்ந்த ப.கிருசாந்த் என்ற மாணவன் கழிவுகள் பொருட்களை கொண்டு சிறிய மோட்டாா் சைக்கிள் ஒன்றை உருவாக்கியுள்ளான். 

வடிவமைத்த உந்துருளியை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகத்தில் வைத்து செயற்படுத்திக்காட்டினார்.

உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் பொறியியல் தொழில்நுட்பப்பிரிவில் குறித்தமாணவன் கல்விகற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Radio