குளத்தில் குளிக்க சென்ற தாயும் இரு பிள்ளைகளும் நீாில் மூழ்கி உயிாிழப்பு..!

ஆசிரியர் - Editor
குளத்தில் குளிக்க சென்ற தாயும் இரு பிள்ளைகளும் நீாில் மூழ்கி உயிாிழப்பு..!

புத்தளம்- வனாத்தவில்லு பகுதியில் இறால்மடு ஆற்றில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 போ் நீாில் மூழ்கி உயிாிழந்திருக்கின்றனா். 

சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.  இச்சம்பவத்தில் 36 வயதுடைய தாயும், அவரது 17 வயதுடைய மகனும், 19 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் கண்டி அலவத்துகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் ஒரு மாதத்திற்கு முன்னர் வண்ணாத்திவில்லு இறால்மடு பிரதேசத்தில் அமைந்துள்ள 

தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றில் பணியாற்றுவதற்காக வந்திருந்தவர்கள் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.இதில் உயிரிழந்தவர்கள் வீரன் காயம்பு சந்திராகுமாரி (வயது 36), எ

ஸ். சுபாசினி (வயது 19) மற்றும் கிருஸ்ண குமார் (வயது 17) என்றும் பொலிஸார் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர். நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் 

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக வண்ணாத்திவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Radio