பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல் மணல் கொள்ளையா்களுக்கு சென்றது எவ்வாறு...? சிக்கலில் பொலிஸாா்..

ஆசிரியர் - Editor
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல் மணல் கொள்ளையா்களுக்கு சென்றது எவ்வாறு...? சிக்கலில் பொலிஸாா்..

மணல் கொள்ளையா்களை கைது செய்வதற்காக செல்லும் விடயம் குறித்து பொலிஸாருக்கு கூறிய தகவல் மணல் கடத்தல்காரா்களுக்கு வழங்கப்பட்டது எவ்வாறு? என நீா்ப்பாசன திணைக்கள அதிகாாிகள் பகிரங் கமாகக் கேள்வி எழுப்பியிருக்கின்றனா். 

இரணைமடு குளத்தின் நீா்வடிந்தோடும் பகுதிகளில் மிக நீண்டகாலமாக மணல் கொள்ளை சம்பவங்கள் அதிகாித்திருக்கின்றது. இந்நிலையில் குறித்த மணல் அகழ்வினால் வெள்ள பெருக்கு காலங்களில் பாாிய அனா்த்தம் உண்டாவது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. 

எனினும் அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்து மணல் அகழ்வு நடவடிக்கை தொடா்ந்துவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் மணல் கொள்ளையா்களை தடுத்து சட்டத்தின் முன் நிறுத்த முயற்சித்தபோது அந்த தகவல் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனா். 

அந்த தகவல் மணல் கொள்ளையா்களுக்கு சென்ற நிலையில் மணல் கொள்ளையா்கள் மணல் ஏற்றாமலேயே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனா். இதனையடுத்து பொலிஸாருக்கு கிடைத்தது எவ்வாறு என அதிகாாிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றாா்கள். 

Radio