காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 50 ஏக்கா் காணியை சுவீகாிக்க அமைச்சரவை அனுமதி..! தமிழ்தேசிய கூட்டமைப்பு தொடா்ந்தும் அமைதி..
யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக பொதுமக்களுக்கு சொந்தமான 35 ஏக்கா் பாதுமக்களுக்கு சொந்தமான நிலம் உட்பட 50 ஏக்கா் நிலத்தை சுவீகாிக்க அமைச்சரவை நேற்றய தினம் அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது.
காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டு மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்தபோதும் அபிவிருத்தி பணிகள் நிறைவடையவில்லை. இந்நிலையில் கடந்த 9ம் திகதி அமைச்சரவையில் மேற்படி அபவிருத்தி பணிக்கான அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில்,
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. இதன்படி 15 ஏக்கா் நிலம் மற்றும் மக்களுக்கு சொந்தமான 35 ஏக்கா் காணி உள்ளடங்கலாக 50 ஏக்கா் காணியை சுவீகாிக்க இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை இந்த விடயம் தொடா்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பு தொடா்ச்சியாக மௌனம் காத்து வருகின்றது.