தோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி..! நாளாந்த வேதனத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க உத்தரவிட்டார் ஐனாதிபதி..
தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த வேதனத்தை 1000.00 ரூபாவாக உயர்த்துமாறு ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உத்தரவிட்டிருக்கின்றார்.
மேலும் இந்த வேதன உயர்வு மார்ச் மாதம் 1ம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளார். இது குறித்து ஐனாதிபதி மேலும் கூறியிருப்பதாவது,
உட் கட்டமைப்பு வசதிகள் உட்பட தோட்டத் துறையின் அனைத்து பகுதிகளையும் அபிவிருத்தி செய்வதற்கு விரைவான நடவடிக்கைகளை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முக்கிய துறையின் தரத்தை அதிகரிக்க - வரி விலக்கு அளித்தல் மற்றும் உர மானியம் வழங்குதல் போன்ற பல முயற்சிகளை அரசாங்கம் எடுத்துள்ளது.
இவற்றின் நன்மைகள் தொழிலாளர்களைப் போய் சேர வேண்டும் என நான் உரிய அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளேன்.
உற்பத்தி மற்றும் தொழில்துறை வளர்ச்சியின் விளைவுகளைத் தொழிலாளர்கள் அனுபவிப்பதற்கான வாய்ப்புகளைப் ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.