நாடாளுமன்ற உறுப்பினா் ரஞ்சன் ராமநாயக்க அதிரடியாக கைது..!

ஆசிரியர் - Editor
நாடாளுமன்ற உறுப்பினா் ரஞ்சன் ராமநாயக்க அதிரடியாக கைது..!

நாடாளுமன்ற உறுப்பினா் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னா் குற்றத்தடுப்பு பொலிஸாாினால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கின்றாா். 

ரஞ்சன் ராமநாயக்கவின் இல்லத்தை சுற்றிவளைத்த அதிகாரிகள், மற்றும் பொலிஸ் படை அவரை கைது செய்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் 

அவா் கைது செய்யப்பட்டுள்ளாா். நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிடுவதன்மூலம் அரசியலமைப்பின் பிரிவு 111 சி (2) இன் பிரகாரம் அவர் குற்றவாளி என்பதனால் 

அவரை கைது செய்ய பிடியாணையை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில் 

நீதவான் பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ads
Radio
×