தமிழ் தலமைகளுக்கு பிரதமர் மஹிந்த எச்சரிக்கை..! இந்திய ஊடுருவலை ஊக்குவிக்கவேண்டாம். தீர்வு எங்களிடமே உள்ளது.

ஆசிரியர் - Editor
தமிழ் தலமைகளுக்கு பிரதமர் மஹிந்த எச்சரிக்கை..! இந்திய ஊடுருவலை ஊக்குவிக்கவேண்டாம். தீர்வு எங்களிடமே உள்ளது.

வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்தியா தீர்க்கும் என தமிழ் தலமைகள் கூறுவதை பற்றி கேள்வி பட்டுள்ளேன். அந்த முயற்சியை நிறுத்துங்கள். 

தீர்வு எங்களிடமே இருக்கின்றது. தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களை பிரதமர் இன்று காலை அலரிமாளிகையில் வைத்து சந்தித்தார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.‘தமிழ் மக்களுக்கான தீர்வை இந்தியா பெற்றுத்தரும் என்ற சிந்தனையைத் தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவச் செய்யும் செயலை 

தமிழர் பிரதிநிதிகள் மாற்றிக்கொண்டு எம்மூடாகத் தீர்வைப் பெற முயலவேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார்.

Ads
Radio
×